வரம் கேட்டல்

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

26 July 2010

Reservation

Lets face it.The quota system is here to(must) stay.சாதி இல்லாத இந்தியாவை உருவாக்க இன்னும் குறைந்தபட்சம் 25 வருடங்கள் ஆகலாம்.கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை அரசியல்வாதிகள் 45 அல்லது 50  வயதை அடையும்பொழுது இந்த ஆருடம் நிறைவேறும்.சலுகைகள் கிடைக்கும்வரை தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தபட்டவனாகவே இருக்க விரும்புவான்.

I wish the quota system to stay. அரசாங்கத்தின் கொள்கை அனைவருக்கும் கல்வி என்பதற்கு முன்னுரிமையே தவிர நன்கு படிப்பவனுக்கு கல்வி என்பதில்லை.

Few good things acheived by the quota system.நாம் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள்,இதை referenceஆக வைத்து கொள்வோம்.
இரண்டாம் தலைமுறையில் கல்வி வாய்ப்பு இல்லாத ஒருவர் இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு கடைநிலை ஊழியர் ஆகிறார். அவரின் பிள்ளைகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக கல்லூரியில் நுழைகின்றனர்.The betterment in their life is possible purely due to the reservation system.இங்கு தான் ஒரு சின்ன இடறல். இதில் பயனடைந்தவர்கள் தங்கள் சமூகம் முன்னேற சேவைகள் பெருமளவில் செய்தாரில்லை.

பட்டம்பெறும் 3ஆம் தலைமுறையினர் பலர் reservation system எதிராகவே உள்ளனர்.இதற்கு முக்கிய காரணம் அது அரசியல் ஆக்கபட்டதே.அரசியலை சாக்கடை என்று கருதுபவர்கள் இதை அதில் ஊறிய மட்டையாக மட்டும் பார்க்கின்றனர்.பார்வை வெளிச்சம் தேவை.

அடுத்த பதிவில் இடஒதுக்கீட்டை நிர்னையப்பதில் எந்த அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்போம்.
கருத்துக்கள் வரவேற்க்கப்படும்.

While browsing the internet i found this blog dealing with this topic in detail.

4 comments:

Sudharsan.D.G said...

ஆனால் இந்த இட ஒதுக்கீடு முறை தவறாக பயன்படுத்தபடுகிறது. இக்காலத்தில் அரசியல் லாபத்திற்காகவே 'கிரீமி லேயர் ' ரை எதிர்கின்றனர். முந்தைய தலைமுறையில் இட ஒதுகீட்டால் பயனடைந்தவர் உடைய வாரிசுகளே இந்த தலைமுறையில் பயனடைய வாய்புகள் அதிகம். ஒரே சமுகத்தை சேர்ந்த கிராமத்தில் உள்ள ஒரு மாணவனும் பட்டணத்தில் உள்ள ஒரு மாணவனும், ஏழையும் பணக்காரனும், ஒன்றாகவே கருதப்படுகின்றனர். எனவே தேவை படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு சென்று அடைவது ஒரு கேள்விதான். மேலும் ஜாதி,மதம் மற்றும் இதர வேறுபாடுகளை கூண்டோடு அழிக்கவேண்டும் என்பது என் எண்ணம். அனால் அதை செய்யவேண்டிய அரசே அதை பயன்படுத்தி தன் சுய லாபத்திற்காக அந்த பிரிவினைகளை அழிக்காமல் வளர்கவிடுவது ஒரு கேலித்தனமான கூத்து என்றே சொல்ல வேண்டும்.

(மேல் கூறியதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துகொள்ளவும்)

Nandakumar said...

@sudharsan உண்மை தான் இதை பற்றி தான் அடுத்த பதிவில் எழுத உள்ளேன்.

Anonymous said...

என்று அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு உயறுமோ .. அன்று தான் அனைத்து மாணவர்களும் சமசீர் கல்வி கற்றதாக கருதபடுவார்கள் ..
அன்று தான் இந்த இட ஒதுக்கிடு முறைக்கு முற்று புள்ளி வைக்க முடியும்..

mystoryanand said...

ofcourse the politicians wont do anything spl to bring abt a gr8 revolution here to change this system.... neither do the so called creamy layer ppl ll act responsibly... everybody ll wantu utilise the benefits the govt give to them....

where the govt missed?:
A database containing info abt each and every indian, accessable by gvt from anywer in INDIA and anytime ....
and a rule to curtail de chance of creamy layer ppl to use the benefits again....

a nice quoting i read recently may be apt here..

INDIA HAS EVERYTHING FOR THE NEED OF HER PEOPLE BUT NOT THEIR GREED...

Labels